விடுதலைப்புலிகளில் இருந்து கருணா பிரிந்தபோது ஏற்பட்ட உயிரிழப்புகளை விட பிள்ளையானும் கருணாவும் பிரிந்தபோது அதிகளான இளைஞர்கள் படுகொலைசெய்யப்பட்தாக சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் நேற்று முதல் இந்த வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் (19) பல்வேறு சுயேட்சைக்குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார் தலைமையில் இன்றைய தினம் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதேவேளை இன்றைய தினம் போராட்ட மக்கள் முன்னணியும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
