கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக அரச வைத்தியசாலைகளில் கதிரியக்க மற்றும் CT Scan பரிசோதனை நடவடிக்கைகள் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.
தற்போது 400 கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் இதன் காரணமாக தற்போது செயலிழந்துள்ள CT, PET, MR Scan இயந்திரங்களை திருத்தும் பணிகளுக்கு ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.