இலங்கையில் புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின் திட்ட ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வதந்திகளை Adani Green Energy SL Ltd. நிறுவனம் முற்றாக நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட அதானி குழுமம், தமது நிறுவனம் மணித்தியாலத்திற்காக கிலோவாட் ஒன்றுக்கு 7 சதம் வரை விலையை மாற்றியமைக்க ஒப்புக்கொண்டதாகக் கூறுவது முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த ஒப்பந்தம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நாங்கள் முழுமையாகக் கடமைப்பட்டுள்ளோம், மேலும் Adani Green Energy SL Ltd முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் திட்ட அளவுருக்களில் எந்த மாற்றங்களும் இல்லை என்பதை மேலும் தெரிவித்துக் கொள்கிறோம்.
முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி குழுமம் மரியாதையுடன் விலகியுள்ளது, மேலும் இலங்கை அரசாங்கம் எப்போதாவது மறுபரிசீலனை செய்தால் எந்தவொரு வளர்ச்சி வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.