இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவரும் புரிந்துணர்வு உடன்படிக்கையை இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடுவதற்கான கோரிக்கை முன்வைக்கப்படுமென வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து 4 கட்டங்களாக 3,34,797 பேர் இந்தியாவிற்கு அகதிகளாக சென்றதாகவும் தற்போது தமிழகத்தில் 103 முகாம்களில் 58,104 பேர் வசிப்பதாகவும் இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

இவர்களில் 50,620 பேர் வட மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டதுடன் 2009 தொடக்கம் இதுவரை 14,531 பேர் நாடு திரும்பியதாக வட மாகாண ஆளுநரிடம் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் நாடு திரும்புவதற்கு நிலையான கட்டமைப்பு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் எனவும் இதற்காக இலங்கை – இந்தியா இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட வேண்டுமெனவும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.