இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று கூறும் நான்கு நபர்கள் மீது பிரிட்டன் தடை விதித்துள்ளது.
ஷவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜெயசூரிய, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன். (கருணா அம்மான் ) ஆகியோர் மீது இந்த தடை வீதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பிரிட்டன் விதித்திருக்கும் தடையால் தனது அரசியலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் ) தெரிவித்தார்.

இந்த தடை தொடர்பில் கருணா அம்மான் தெரிவித்ததாவது, தான் எந்தவித மனித உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நான் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை. அதனால் இந்த தடை என்னை பாதிக்காது. எனது அரசியலையும் பாதிக்காது. நான் அப்படியெல்லாம் செயற்பட்டிருந்தால் நான் அங்கு தஞ்சமடைந்த காலப்பகுதியில் பிரிட்டன் என்னை கைது செய்திருக்கலாமே? ஏன் என்னை பத்திரமாக திருப்பி அனுப்ப வேண்டும்? அப்போது இவையெல்லாம் தெரியவில்லையா? இவற்றைப்பற்றி நான் அலட்டிக்கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்தார்.