மட்டு வவுணதீவு பிரதேசத்தில் மாடுகளை திருடிய நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நைப்புடைப்பு செய்த நிலையில், குறித்த நபர் பின் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று (25) அதிகாலை ஒரு மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 15 ம் திகதி வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புதுமண்டபத்தடி பிரதேசத்தில் மாடு திருடிய இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நைப்புடைப்பு செய்த பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து அவரை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ததையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பெற்றுவரும் அவரை சிறைச்சாலை நிர்வாகம் பெறுப்பேற்று சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் சிகிசை பெற்று வந்துள்ளார்.
சிறைச்சாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் சம்பவதினமான நேற்று அதிகாலை ஒரு மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் இதுவரை யார் என அடையாளம் காணப்படவில்லை எனவும், இவர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.