Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தங்கள் உண்மை முகத்தை வெளிக்காட்டியது தேசிய மக்கள் சக்தி

தங்கள் உண்மை முகத்தை வெளிக்காட்டியது தேசிய மக்கள் சக்தி

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வெளிவிவகார அமைச்சரின் கருத்தானது சிவப்பு கட்சியை சேர்ந்த தேசிய மக்கள் சக்தியினரும் மனித உரிமைக்கு எதிராக செயற்பட்டவர்களை அல்லது மனித பேரவலத்தை ஏற்படுத்தியவர்களை பாதுகாக்க கூடிய விதத்தில் செயல்படுகிறார்கள் என்பது புலனாவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பிரித்தானிய அரசு 4 நபர்களுக்கு எதிராக அதாவது இலங்கை இராணுவ படையினை சேர்ந்தவர்கள் மூவர் மற்றும் கருணா என்று அழைக்கப்படும் முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானிய அரசு பயண தடையினை வீதி இருக்கின்றது.

அந்த வகையில் பார்க்கின்ற போது யுத்தம் முடிவுற்று 16 வருடங்களுக்குப் பின்னர் பிரித்தானிய அரசு மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித பேரவளத்தை ஏற்படுத்தியவர்கள் என்பதன் அடிப்படையில் இந்த தடையை விதித்து இருப்பதாக நாங்கள் அறிகின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நான்காயிரம் நாட்களுக்கு மேல் அதிகமாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள், தங்களுடைய உறவுகளை தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் பார்க்கின்ற போது மனித உரிமை பேரவளம் இடம் பெற்றிருக்கின்றது. மனித உரிமை மீறப்பட்டு இருக்கின்றது காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த அடிப்படையில் உள்நாட்டு பொறிமுறை மூலமாக இவற்றையும் கண்டுகொள்ளாத நிலையில் பிரத்தானிய அரசு இந்த நால்வருக்கு எதிராக தடையினை ஏற்படுத்தி இருக்கின்றது என்ற விடயம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சம்பந்தமாகவும், பாதிக்கப்பட்ட உறவுகள் சம்பந்தமாகவும் பார்க்கின்ற போது அவர்கள் இந்த விடயத்தை வரவேற்கும் நிலையில் காணப்படுகின்றார்கள்.

காலம் கடந்தாவது இவ்வாறானதொரு ஒலிக்கீற்று கிடைத்திருக்கின்றது என்பது அவர்களுடைய எண்ணமாக இருக்கின்றது. இந்த விடயம் சம்பந்தமாக இலங்கை அரசு என்ன சொல்லப் போகின்றது என்று நாங்கள் அவதானித்துக் கொண்டிருந்தோம் அந்த நிலையில் வெளியுறவு அமைச்சராக இருக்கின்ற விஜித ஹேரத் அவர்கள் கூறியிருக்கின்றார் பயண தடை என்பது ஒரு தலைப்பட்சமான பயண தடை என்று கூறியிருக்கின்றார்.

நாங்கள் சொல்லக்கூடியது என்னவென்றால், நீங்கள் உள்நாட்டு பொறிமுறை மூலமாக இந்த அரசு 77 ஆண்டுகளாக, நீங்கள் வந்து ஆறு மாதங்களாக இந்த விடயங்கள் பற்றி நீங்கள் எதுவும் பேசாமல், கதைக்காமல் இருக்கின்ற போது வெளியில் இருக்கின்ற ஒரு அரசு பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக நான்கு பேருக்கு எதிராக பயண தடையினை விதித்திருக்கின்றது என்பது தமிழ் மக்களை பொறுத்த அளவில் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய பெருவுடையமாக அமைந்திருக்கின்றது.

இந்த அரசாங்கங்கள் கடந்த காலத்தில் என்ன செய்திருக்கின்றது என்றால் மனித உரிமை மீறல்களை செய்தவர்கள், மனித பேரவலத்தை ஏற்படுத்தியவர்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்ட போன்ற பல்வேறுபட்ட நிகழ்வுகளுக்கு சம்பந்தமாக இருக்கின்றவர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்கி இருக்கின்றார்கள்.

உண்மையில் பார்க்கப் போனால் கடந்த காலத்தில் இறுதி யுத்தத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்ற தளபதிகள் முப்படை தளபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இராணுவ தளபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள், கடற்படை தளபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள், ஆளுநராக கூட நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று சொன்னால் குற்றம் இழைத்தவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கின்ற போக்கினை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது. கடந்த காலத்தில் இருந்து இந்த நடைமுறையை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாவது இந்த விடயத்தில் கவனம் செலுத்துமா என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற போது வெளியுறவு அமைச்சர் கூறி இருக்கின்றார் இந்த பயணத் தடையை ஏற்படுத்தியது ஒருதலை பச்சமான முடிவு. இதனை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என கூறியிருக்கின்றார் என்றால் இந்த சிவப்பு கட்சியை சேர்ந்த தேசிய மக்கள் சக்தியினர் மனித உரிமைக்கு எதிராக செயற்பட்டவர்களை அல்லது மனித பேரவளத்தை ஏற்படுத்தியவர்களை பாதுகாக்க கூடிய விதத்தில் செயல்படுகிறார்கள் என்பது புலனாகின்றது.

எனவே சிங்கள தலைமைகள் என்பது நீல கட்சியாக இருந்தால் என்ன பச்சைக் கட்சியாக இருந்தால் என்ன சிவப்பு கட்சிகளாக இருந்தால் என்ன தமிழ் மக்கள் தொடர்பாக மனித உரிமைகளை மீறியவர்களுக்கு தண்டனை வழங்குகின்ற விடயத்தை விடுத்து அவர்களை பாதுகாக்கின்ற விடயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அண்மையில் வெளிவிவகார அமைச்சர் கூறிய கருத்திலிருந்து நாங்கள் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

அது மட்டும் இல்லாமல் முன்னாள் ஜனாதிபதி ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கின்றார். மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் யுத்தத்தை நடாத்தியவர் அல்லது தீர்மானங்களை எடுத்தவர் நான் என்று கூறுகின்றார். அந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தியவர்கள் தான் இந்த தளபதிகள் என்று கூறுகின்றார். ஆகவே இந்த தளபதிகள் செய்து இருக்கின்ற அனைத்துக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் உரிமை கூறுகின்றார்.

ஆகவே இந்த யுத்தத்தில் விளைவாக மன்னார் பேராயர் ராயப்பு யோசப் குறிப்பிட்டு இருக்கின்றார், ஒரு இலட்சத்து 46 ஆயிரம் மக்கள் காணாமலாக்கப்பட்டு, கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்கின்ற கருத்தை கூறி இருக்கின்றார்.

வேறு அறிக்கையில் அது 46 ஆயிரம் ஆகக் கூறப்பட்டிருக்கின்றது. அரசு சார்பான அறிக்கையிலும் கூட ஆயிரக்கணக்கான நபர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்று கூறுகின்ற போதும் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் கூறுகின்ற கருத்தின் படி தீர்மானங்களை எடுத்தவர் தான் நடைமுறைப்படுத்தியவர்கள் தான் படையினர் ஆகவே அங்கு நடைபெற்றிருக்கின்ற விடயங்களுக்கு தான் ஒரு பொறுப்பு எடுப்பது போன்று கூறி இருக்கின்றார்.

நடைபெற்ற யுத்தம் தமிழர்களுக்கு எதிரான யுத்தம் அல்ல பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என கூறுகின்றார். ஆகவே இந்த அப்பாவி மக்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டும் கொல்லப்பட்டு இருப்பதையும் எடுத்துக் கொண்டால் இவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று சொல்வதற்கு முன்னால் ஜனாதிபதி முனைகின்றார் போல தெரிகின்றது.

எனவே இந்த அரசாங்கத்திலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது இந்த உள்நாட்டு பொறிமுறை மூலமாக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்த்தால் அவர்களுடைய உள்நாட்டு பொறிமுறையும் குற்றம் இழைத்தவர்களை பாதுகாக்கின்ற ஒரு பொறிமுறையாக இருந்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. என்றார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி அநுர
செய்திகள்

எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி அநுர

May 14, 2025
கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தால் உதவி
செய்திகள்

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தால் உதவி

May 14, 2025
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகனங்கள் நாளை ஏலம்
செய்திகள்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகனங்கள் நாளை ஏலம்

May 14, 2025
இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக ஆதாரம் இல்லை – கனடாவில் திறக்கப்பட்ட நினைவு சின்னத்திற்கு அரசு அதிருப்தி
செய்திகள்

இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக ஆதாரம் இல்லை – கனடாவில் திறக்கப்பட்ட நினைவு சின்னத்திற்கு அரசு அதிருப்தி

May 14, 2025
மெக்சிக்கோவில் மேயர் வேட்பாளர் உட்பட நால்வர் சுட்டுக்கொலை
உலக செய்திகள்

மெக்சிக்கோவில் மேயர் வேட்பாளர் உட்பட நால்வர் சுட்டுக்கொலை

May 14, 2025
84 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஹிட்லரின் முக்கிய ஆவணங்கள்
செய்திகள்

84 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஹிட்லரின் முக்கிய ஆவணங்கள்

May 14, 2025
Next Post
காணாமலாக்கப்பட்டோரில் 19 பேர் கண்டுபிடிப்பு

காணாமலாக்கப்பட்டோரில் 19 பேர் கண்டுபிடிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.