மெக்சிக்கோவில் நடந்த தேர்தல் பேரணியில் மேயர் வேட்பாளர் யெசெனியா லாரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
மெக்சிக்கோவில் வெராக்ரூஸில் வரும் ஜூன் 1 ஆம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ளதையொட்டி, கடந்த (11) திகதி தேர்தல் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் மொரோனா கட்சியின் மேயர் வேட்பாளராக போட்டியிடும் யெசெனியா லாரா தனது 3 ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார். அப்போது யெசெனியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மொரேனா கட்சி வேட்பாளர் யெசெனியா லாரா, துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் தனது பிரச்சார நடவடிக்கைகளின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டார், அதனுடன் ‘இளைஞர்களின் பலம் என்னை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடக்கத் தூண்டும் ஆற்றல்’ என்ற தலைப்பில் பதிவு வெளியிட்டிருந்தார்.
ஆதரவாளர்கள் மொரேனா கொடிகளை அசைத்தபடி, மோட்டார் சைக்கிள் ஊர்வலம் சென்ற போது, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.