ஒவ்வாரு நாடுகளுக்கும் பரஸ்பரமாக வரியை விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதனால் வர்த்தக போர் தொடங்கியுள்ளது.
இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம், மனிதர்களே வசிக்காத வெறும் பென்குயின்கள் மட்டும் வசிக்கும் தீவுக்கு அவர் வரி வித்திருப்பது பேசு பொருளாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் ஹர்ட் மற்றும் மெக்டொனால்ட் தீவுகள் இருக்கின்றன. இந்த தீவில் மனிதர்கள் கிடையாது. சுற்றுலா பயணிகள் கூட இந்த தீவுக்கு வருவது கிடையாது.

ஆனால் இந்த தீவில் உற்பத்தியாகி அமெரிக்காவில் விற்கப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருக்கிறார். இந்த தீவில் எந்த தொழிற்சாலையும் இல்லை.எந்த பொருளும் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
அப்படி இருக்கும்போது ஏன் 10% வரி அறிவிக்கப்பட்டிருக்கிறது? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால் அமெரிக்கா தரப்பில், “அமெரிக்க பொருட்களுக்கு அந்த தீவு 10% வரியை அறிவித்திருக்கிறது. எனவேதான் நாங்களும் பதிலுக்கு வரியை அறிவித்திருக்கிறோம்” என்று அரிய விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.