மொரட்டுவ பொலிஸ் பிரிவின் உஸ்வத்த பிரதேசத்திற்குட்பட்ட கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்க அமைவாக சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலத்தை திடீர் மரண விசாரணை அதிகாரி பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.