மட்டக்களப்பு மண்முனை பாலத்தின் கீழ் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலைக் கடிக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரை முதலை பிடித்துச் சென்றுள்ளது. இந்நபரை தேடும் பணியில் மீனவர்கள், பொலிஸார், சுழியோடிகள், பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று குறித்த நபர் ( 21) ஆற்றிலிருந்து தலை கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.