இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவரும் வீரருமான சச்சின் டெண்டுல்கர்
இலங்கை வருகிறார். யுனிசெவ் அமைப்பின் தெற்காசியாவிற்கான பிராந்திய தூதுவராக செயல்படும் அவர் கொழும்பு சினமன் லேக்சைட்டில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கை வருகிறார்.
கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தெற்காசியபிராந்தியத்தில் உள்ள சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் வெளிச்சம்போட்டுக் காட்டுவதே இந்தநிகழ்வின் நோக்கமாகும்.
சுகாதாரம், கல்வி மற்றும்பாதுகாப்பு போன்ற துறைகளில் சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் தீவிரமாக செயல்படும் யுனிசெவ் திட்டங்களில், பிராந்தியத் தூதுவர் எனும் வகையில் சச்சின் முன்னின்று செயல்படுகிறார். இதற்காகவே அவர் இலங்கை வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.