37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து பயணிகள் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக தலைமன்னார் பியர் கப்பல் தளம் மீண்டும் மறுசீரமைக்கப்படவுள்ளது. துறைமுகங்கள். கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு இதற்குத் திட்டமிட் டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்தத்தளம். போரின் பின்னர் பயன்பாடின்றிக்கைவிடப்பட்டு அழிவடைந்துள்ளது. தற்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பணிப்புரையின் கீழ், கப்பலை மீள நிர்மாணிக்கும் பொறுப்பு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
1.800மில்லியன்ரூபாய் செலவில் துறைமுகத்தின் புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளன. அத்தோடு துறைமுகத்தின் எல்லையில் உள்ள அரசுக்குச்சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலம் துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்காகப்பயன்படுத்தப்படும்.
இந்த புதிய அபிவிருத்திகளின் கீழ். நவீன பயணிகள் முனையம் மற்றும் சரக்குக் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே முன்னர் பயணிகள் கப்பல் சேவை இடம்பெற்று வந்தது. ஆனால் சூறாவள யால் தனுஷ்கோடிதுறைமுகம் முற்றிலும்அழிந்துபோய் விட்டது. இதனால் தற்போது இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து தலைமன்னாருக்குப் பயணிகள் படகுச் சேவையை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுவருகின்றது