சிறுவன் ஒருவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்ற ஓய்வுபெற்ற பொலிஸ்
சார்ஜன்ட் ஒருவர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட
பொலிஸ் சார்ஜன்ட் ஏறாவூர் பகுதியைச்சேர்ந்த அறுபத்தொருவயதுடையவர்ஆவார்.
ஏறாவூர்பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் பலாத்கார முயற்சி இடம்பெற்றதாக
கிடைக்கப்பெற்றமுறைப்பாடு தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர்
சந்தேகநபர் பொலிஸ் சார்ஜன்ட் கைது செய் யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது
செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.