மட்டக்களப்பின் நாவலடி- பொலநறுவை பிரதான வீதியை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தவும், அத்துமீறி காணி அபகரித்தவர்களை அகற்றுமாறும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார்.
அந்த பகுதியிலுள்ள மகாவலி அதிகார சபைக்கு சொந்தமானகாடுகள் முஸ்லிம் மக்களால் கையகப்படுத்தப்பட்டு, நெருப்பூட்டி அழிக்கப்பட்டு எல்லையிடப்பட்டுள்ளன. சில வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு கிழக்கு ஆளுநரை நேரடியாக சந்தித்து பேசினார். இதைத் தொடந்து ஆளுநர் உடனடியாக செயல்பட்டு, பொலிஸார் மற்றும் வனவளத்துறையினரை தொடர்பு கொண்டு அத்துமீறுபவர்களை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.