முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குளப் பகுதியில் ஹன்ரர் வாகனத்தில் வந்த இராணுவத்தினர் சட்ட விரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு பொலிஸார் துணை போகின்றனரா என்று சமூக செயல்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தண்ணிமுறிப்பு குளத்தில்அத்துமீறி மீன்பிடி நடப்பதாகஅப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பீற்றர் இளஞ்செழியனும் அவ்விடத்துக்கு சென்ற வேளை, இராணுவத்தினர்
மணல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர்.
தண்ணிமுறிப்பு – குருந்தூர்மலை பகுதியில் பாதுகாப்பு கடமையில் நிற்கும் இரு பொலிஸார் மண் அகழ்வை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றதாகவும். இராணுவத்துக்கு ஒரு சட்டம்,மக்களுக்கு இன்னொரு சட்டமா?பொலிஸாரும் இந்த சட்டவிரோத மணல் அகழ்வுக்கு உடந்தையாக செயல்படுகின்றனரா என்று அவர்கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று முன்தினம் நடந்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.