ஆளுநர் ஒருவரின் நிறுவனம் இலட்சக்கணக்கான இளநீரை வெட்டி போத்தல்களில் அடைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பியதால்தான் இந்த தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அந்த குற்றச்சாட்டில் இருந்து தனது நண்பரை காப்பாற்றி அதை குரங்குகள் மீது சுமத்துவதற்காக அரசாங்கம் இந்த குரங்கு கணக்கெடுப்பை நடத்தியதாகவும் வசந்த முதலிகே குற்றம் சாட்டுகிறார்.

கடந்த அரசாங்க காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் நண்பர்களுக்கு உபசாரம், அரசியல் செல்வாக்கு, டீல் என்று விமர்சிக்கப்பட்டதாகவும், இன்று அவை என்னவென்று தான் வியப்படைவதாகவும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த ஆண்டு (2026) நாட்டில் தேங்காய் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.