ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறவுள்ள புனித தந்தத்தின் தரிசனத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள பாதுகாப்புப் படையினர் தங்குவதற்கு கண்டியில் உள்ள 41 பாடசாலைகள் பயன்படுத்தப்படும் என கண்டி வலயக் கல்விக் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இந்த பாடசாலைகள் ஏப்ரல் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை பாதுகாப்புப் படையினர் தங்குவதற்காக பயன்படுத்தப்படும்.
பாதுகாப்புப் படையினர் தங்குவதற்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை வழங்கப்படும் எனவும் கண்டி வலயக் கல்விப் பணிமனை தெரிவித்துள்ளது.

விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகளில் உள்ள மாணவர்கள், தவறவிட்ட கல்வி நடவடிக்கைகளுக்கான நாட்களை பூர்த்தி செய்வதற்கு ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் ஒரு மணி நேரம் கூடுதலாக வகுப்புகள் நடத்தப்படும்.
பாதுகாப்புப் படையினர் தங்குவதற்காக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக கண்டி வலயக் கல்விப் பணிமனை தெரிவித்துள்ளது.