பிணையில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தனது பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான முன்னாள் அமைச்சரை இன்று (08) பிற்பகல் பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ். வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்சம் பெறுவதற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் அவரை எட்டாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்று இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் அளித்த தகவலை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்தநிலையில், இன்று (08) அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.