நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தன் மீது பழிபோடும் வகையிலான காணொளிகள் மற்றும் அறிக்கைகளை நீக்குவதற்கும் கால அவகாசம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் தன்னைப் பாதிக்கும் வகையில் செய்த தவறுகளுக்காக பகிரங்க வெளியில் மன்னிப்பு கேட்பதற்கு ஒரு நாள் அவகாசம் தருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இன்று (09) தனது உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் வெளியிட்ட பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் “என் மீது பழி போடுவதற்காக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் உங்கள் வீடியோக்கள் மற்றும் ஸ்டேட்மென்ட்களை அழிப்பதற்கும் தனிப்பட்ட ரீதியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக எனது நாடாளுமன்றத்தில் உள்ளே நடக்கும் சம்பவங்களை பகிர்ந்து மான நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் தெரிந்தோ தெரியாமலே நீங்கள் செய்த இந்த தவறுகளை நான் மன்னிப்பதற்கும் உங்களை சட்டரீதியான கேள்விக்கு உட்படுத்தாமல் இருப்பதற்காகவும் பகிரங்க வெளியில் மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு நாள் அவகாசம் தருகிறேன்.
நாளைய தினம் (10) காலை 9 மணியிலிருந்து சட்டரீதியான நடவடிக்கைகள் சகலருக்கும் எடுக்கப்படும். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு எடுக்கப்படும் எந்த ஒரு சமாதான நடவடிக்கைகளுக்கும் என்னால் மன்னிப்பு வழங்க முடியாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.