சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவை என்றும் அந்தக் கொள்கலன்களில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களே இருந்துள்ளன என்றும் யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்று (05) பாராளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி தெரிவித்த கருத்துக்கு பாதுகாப்பு பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா மறுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
அர்ச்சுனா எம்பியின் கருத்து முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் பொய்யானது எனவும் அத்தகைய குற்றச்சாட்டுகளை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய பாதுகாப்பு விடயங்களை பொது மன்றங்களில் அரசியலாக்கவோ அல்லது தவறாக சித்தரிக்கவோ கூடாது என பாதுகாப்பு அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.








