63 வயதான வயோதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளத்துச்சேனை – பேரில்லாவெளி பகுதியில் செவ்வாய்க்கிழமை (08) இரவு இடம்பெற்றுள்ளது.

கொலையாளியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், கொலைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.