வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை பிரதேசத்தில் உள்ள (காகித நகர்) கிணற்றில் இளைஞர் ஒருவர் இன்று (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் பாற்சபை வீதி காவத்தமுனை எனும் முகவரியைச் சேர்ந்த (வயது 28) சீனி முகம்மது தஸ்லீம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி வ.ரமேஸ் ஆனந்தன் பார்வையிட்டதுடன், சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணிக்கப்பட்டதன் அடிப்படையில் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், மரணத்திற்கான காரணம் இது வரை கண்டறியப்படாத நிலையில், வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.