பொலிஸாருக்கு தனியான சம்பளக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (10) நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான வரைவு ஏற்கனவே பதில் பொலிஸ் மா அதிபரினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சுடன் கலந்தாலோசித்து 2026 ஆம் ஆண்டில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான சம்பளக் கட்டமைப்பை முன்வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக விஜேபால தெரிவித்துள்ளார்.
மேலும், பொலிஸ் சேவையில் உள்ள பாரியளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.