Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு இப்படியெல்லாம் அடிக்கப்போவதாக எலான் மஸ்க் டுவிட்!

மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு இப்படியெல்லாம் அடிக்கப்போவதாக எலான் மஸ்க் டுவிட்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

உலகின் டாப் பணக்காரர்களான எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜூக்கர்பெர்க் நேருக்கு நேர் சண்டையில் மோத உள்ளதாக கூறப்படும் நிலையில், இது குறித்த முக்கிய கருத்தை எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த நவீன உலகம் முழுக்க முழுக்க செயலிகள் மற்றும் டெக் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகிறது. அதன்படி இப்போது மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவை உள்ளன.

இதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை மார்க் ஜுக்கர்பெர்க் வசம் இருக்கும் நிலையில், ட்விட்டர் எலான் மஸ்கிடம் இருக்கிறது. எலான் மஸ்க் கடந்தாண்டு தான் பெரும் போராட்டத்திற்கு நடுவே ட்விட்டரை வாங்கினார்.

டுவிட்டர் நிறுவனத்தில் யூசர்கள் அதிகம் இருந்தாலும் அதில் இருந்து பெரியளவில் வருமானம் கிடைக்கவில்லை. இதனால் ட்விட்டரை வாங்கிய மஸ்க் கையோடு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். ட்விட்டரின் டாப் ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய மஸ்க், ஆட்குறைப்பிலும் இறங்கினார். அதன் பிறகும் கூட தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை எடுத்தார். அதில் பல நடவடிக்கைகள் சர்ச்சையானது. ட்விட்டர் நிறுவனத்தின் மீதான நல்ல பிம்பத்தை கெடுக்கும் வகையில் இருந்தது.. இந்தச் சூழலில் தான் ட்விட்டரை மொத்தமாக காலி செய்யும் வகையில் ட்விட்டருக்கு போட்டியாக த்ரெட்ஸ் (Threads) என்ற மற்றொரு சமூக வலைத்தளத்தை பேஸ்புக் தொடங்கியது. இது எலான் மஸ்கிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. யாருக்கும் எந்தவொரு ஆப்ஷனும் இல்லாமல் ஒட்டுமொத்த உலகையும் மார்க் ஜுக்கர்பெர்க் கட்டுப்படுத்த முயல்வதாக வெளிப்படையாகவே மஸ்க் சாடினார்

இதற்கு முன்பே பேஸ்புக் அனுப்பிய ராக்கெட்டை எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் சொதப்பிய விவகாரத்தில் இருவருக்கும் இடையே ஏழாம் பொருத்தம் தான் இருந்தது. த்ரெட்ஸின் வரவு இருவருக்கும் இடையேயான உறவை மேலும் மோசமானதாக மாற்றியது. இதனிடையே எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் இடையே கேஜ் மேட்ச் நடக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதை இருவருமே மறுக்கவில்லை. மாறாக பயிற்சி பெறும் வீடியோக்களையே பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்த கேஜ் மேட்சில் தனது சண்டை ஸ்டைல் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலை மஸ்க் பகிர்ந்துள்ளார். பிரபல WWE நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவை பகிர்ந்த எலான் மஸ்க், “நான் WWE ஸ்டைலை பின்பற்றி போட்டியில் சண்டையிட போகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே காரசாரமான வார்த்தை மோதல் தொடர்ந்தே வருகிறது. “நாள் முழுக்க வெயிட் தூக்கி சண்டைக்குத் தயாராகி வருகிறேன். வொர்க் அவுட் செய்ய நேரமில்லை.. இருப்பினும் போட்டிக்கு தயாராகி வருகிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார். போட்டிக்கு தான் எப்போதும் தயாராகவே இருப்பதாகவும் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
Next Post
சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வழங்க அமைச்சரவை அனுமதி!

சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வழங்க அமைச்சரவை அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.