கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் (G.C.E A/L Exam) பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை நடைபெற்றது.

இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் 3,33,185 பரீட்சார்த்திகள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இவர்களில் 2,53,390 பாடசாலை பரீட்சார்த்திகளும் 79,795 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர்.நாடு முழுவதும் 2,312 பரீட்சை மையங்களிலும் 319 ஒருங்கிணைப்பு மையங்களிலும் இந்த பரீட்சை நடைபெற்றது.
இதேவேளை உயர்தரப் பரீட்சையின் மேற்பார்வை பணிகளில் 25,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.