2026 ஆம் ஆண்டு வரையிலான பங்களிப்புகளுக்கான வருடாந்த வட்டி வீதம் குறைந்தபட்சம் 09 வீதமாக தொடர்ந்தும் பேணுவதற்கு ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 5 வருடங்களில் ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்காக செலுத்தப்பட்ட வருடாந்த வட்டி வீதத்தை கருத்திற்கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த நிதியத்துக்கு சொந்தமான திறைசேரி பிணைமுறிகளை மீள் கட்டமைப்பதால், அந்த நிதியத்தின் அங்கத்தவர்களினது ஓய்வூதிய கொடுப்பனவுகள் மற்றும் நன்மைகள், பாதிக்கப்படாத வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கான, யோசனை ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.