தேர்தல் இலஞ்சத்தினை ஜனாதிபதியே மேற்கொள்வதை வன்மையாக கண்டிப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழு இதற்கு எதிரான உடனடியாக நடவடிக்கையெடுக்கவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக கீழ் நிலைக்கு இறங்கி ஜனாதிபதி பொய்களை கூறுவதும் தேர்தல் விதிமுறைகளை தானே மீறும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிலையில் மக்கள் அதற்கு எதிராக வாக்களிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்திய இராணுவத்தினை வெளியேறக்கோரியும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசை பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு கோரியும் உண்ணாநோன்பிருந்து உயிர்நீர்த்தி அன்னை பூபதியின் நினைவேந்தல் (19) சனிக்கிழமை தமிழரசுகட்சியின் லயன்ஸ் வீதியில் அமைந்துள்ள காரியாளையும் ஒன்றில் உள்ள அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.






நாடாளுமன்ற உறுப்பினர் ஜா.சிறிநேசன் தலைமையில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.
அன்னை பூபதியின் நினைவேந்தலின் போது அன்னையின் திருஉருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தபட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீநாத், முன்னாள் மட்டக்களப்பு மாணவர் சபை முதல்வர் சரவணபவன், மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சியின் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அன்னை பூபதியம்மா மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலய முன்றிலில் மார்ச் 19 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தில் தொடர்சியாக ஈடுபட்டு ஏப்பில் 19 ஆம் திகதி உயிர்நீத்தார்.
இது 37வது ஆண்டு நினைவாக இம்முறையும் வடக்கு கிழக்கில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.