இன்று (21) பிற்பகல் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் காரும் மோட்டார்சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் செட்டிபாளையத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களுவாஞ்சிகுடி பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காரின் பின் பகுதியில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மோதியதிலே இந்த விபத்து சம்பவித்திருக்கிறது விபத்தில் இளைஞர்கள் காயமடைந்துள்ளதுடன் காரின் பின் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.