ஒருமுறை மாத்திரமே பயன்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்ட போத்தல்களில் மீண்டும் தண்ணீரை நிரப்பிக் குடிக்க வேண்டாம் என்று கொழும்பு சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் மருத்துவர் ஜி.விஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஒருமுறை பயன்படுத்தப்படும் போத்தல்களில் அதி கூடிய சூரிய ஒளிபட வாய்ப்புள்ளதால் சில இரசாயனங்கள் தண்ணீரில் கலக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சிறுவர்கள் – குறிப்பாக மாணவர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்து குடிதண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவதை தவிர்த்து கண்ணாடி அல்லது தரமான போத்தல்களை பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது. பாடசாலைகளில் ஆசிரியர்கள் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். மாணவர்களுக்கு போதுமான சுத்தமான குடி தண்ணீரை வழங்குவதை உறுதி செய்வது மிகவும் அவசியம் என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.