மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட மொட்டு கட்சி ஆர்வலர் டான் பிரியசாத்தின் மரணத்தை அறிவித்த முந்தைய அறிக்கையை இலங்கை பொலிஸ் திரும்பப் பெற்றுள்ளது.
பொலிஸ் ஊடகத் தொடர்பாளர் ஆரம்பத்தில் அவரது மரணத்தை உறுதிப்படுத்திய போதிலும், பின்னர் வந்த புதுப்பிப்பில் பிரியசாத் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும் இன்று (22) இரவு 9.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.