முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் (22) மாலை விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது அவர்கள் ஒரு சுமூகமான உரையாடலில் ஈடுபட்டதாகவும், அரசியல் மற்றும் தனிப்பட்ட கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நெருங்கிய அண்டை நாடுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பரஸ்பர புரிதலின் அடிப்படையில் பல்வேறு துறைகளின் ஊடாக கட்டியெழுப்பப்பட்ட ஆழமான நட்புறவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது மரியாதையுடன் நினைவு கூர்ந்ததாக குறிப்பிடப்படுகிறது.
குறித்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதியுடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசமும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.