ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் அதற்கு முன்னரே பல தாக்குதல்களை திட்டமிட்டிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலத்தில் எழுதப்பட்ட அறிக்கையை தற்போதைய அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது.

இது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் ஆகும். மக்களின் கண்ணில் மண்ணை தூவும் நாடகம் ஒன்றையே தற்போதைய ஜனாதிபதி நடத்துகின்றார்.
2014ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் சஹ்ரான் குழுவினர் தொடர்புபட்டிருந்ததாக ‘FBI’ தெரிவித்துள்ளது.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னரே சுதந்திர தினம் மற்றும் தலதா மாளிகை பெரஹர ஆகியவற்றுக்கு தாக்குதல் நடத்த சஹ்ரான் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.