வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டலடி – புளியன்கண்டலடி வீதியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் காணப்பட்டதாக வாகரை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
39 வயதுடைய கதிரவௌி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் கடந்த 26ஆம் திகதி காலை கண்டலடியில் இறால் பிடிப்பதற்கு சென்றுவருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வௌியேறிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இது இயற்கை மரணமாக அல்லது கொலையா என்பது தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வௌியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.