மினுவாங்கொட – கலஹுகொட பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கலிங்க ரமேஷ் சதுரங்க பெரேரா என்ற இளைஞன் காணாமல் போயுள்ள நிலையில், இவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்த இளைஞன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் காணாமல் போனமை தொடர்பில் அவரது தாயார் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மினுவாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 071 8591612
மினுவாங்கொடை பொலிஸ் – 031 2295223