இந்தியா, பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு உள்ளிட்ட சார்க் நாடுகளுக்கு விசேடமான விசா வகையொன்றை உருவாக்குவதற்கான அவசியம் குறித்து சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தலைமையில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
சார்க் பிராந்திய நாடுகள் தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் வெளிநாட்டுக் கொள்கை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவு போன்ற சார்க் பிராந்திய நாடுகளுக்கு விசேடமான விசா வகையொன்றை உருவாக்க வேண்டியது அவசியம் என குழுவின் தலைவர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
இதன்காரணமாக, இந்த நாடுகளுக்கு இணக்கமான முறையில் விசா வழங்கும் முறையை தயாரிக்க குழு முன்மொழிவதாகத் தெரிவித்தார்.