தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (01) ஆங்காங்கே நடைபவனி நிகழ்வுகள் இடம்பெற்றது.
அந்த அடிப்படையில் “தொழிலாளர் தினமானது மாற்றத்திற்கான தொழிலாளர் புரட்சிநாள்” என்னும் தலைப்பில் அம்பாறை மாவட்ட தமிழர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட தொழிலாளர்களின் சங்கமிப்போடு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தம்பிலுவில் முனையூர் வீதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவனியானது, திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்தினை வந்தடைந்து பின்னர் கோரைக்களப்பு ஸ்ரீ சமாதிப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னதாக குறித்த நடைபவனியானது நிறைவடைந்தது.




