தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன் ராசையா (ராப் சிலோன்).
வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மைனர்‘ படத்தின் மூலம் ராப் பாடகர் வாகீசன் ராசையா தென்னிந்திய சினிமாவில் கால் பதிக்கிறார்.

இந்த திரைப்படத்தில் அவருடன் மற்றுமொரு இலங்கையரான பிக் பாஸ் புகழ் ஜனனி ஜோடி சேர்ந்துள்ளார்.
அன்ன நடை ஜிமிக்கி சிங்காரி ராப் பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் ராப் பாடகர் வாகீசன் ராசையா.
புலம்பெயர் தமிழரான ராப் பாடகர் வாகீசன் ராசையா யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
