உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளுக்கான எரிபொருள் செலவை அரசாங்கத்துக்கு மீளச் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.

இதற்காக அவரது வாகனத்துக்கு ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட எரிபொருளுக்கான செலவை மீளவும் அரசாங்கத்துக்கு செலுத்தவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன் முன்னைய அரசியல்வாதிகள் போன்று தான் கட்சியின் தேவைகளுக்காக அரசாங்க செலவில் ஒருபோதும் உலங்கு வானூர்திகளை பயன்படுத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.