புதிய இணைப்பு
இன்று காலை உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கிய நிலையில் அதிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதம் தரித்த 2 விமானப்படை வீரர்கள் மற்றும் 3 சிறப்பு படை வீரர்கள் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் இணைப்பு
ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட பெல் 212 ரக உலங்கு வானூர்த்தி விபத்துக்குள்ளாகியுள்ளது.
உலங்கு வானூர்தி மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.
விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சிலர் காயமடைந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.