உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபையை இலங்கை தமிழரசு கட்சி 18,642 வாக்குகளுடன் 16 உறுப்பினர்களை பெற்று தன்வசப்படுத்திக் கொண்டது.
இந்தநிலையில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல் 2 வருடங்கள் திரு. சிவம் பாக்கியநாதன் முதல்வராகவும், பிரதி முதல்வராக திரு.கந்தசாமி ரகுநாதனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கு அடுத்த 2 வருடங்கள் முதல்வராக திரு.மதனும், பிரதி முதல்வராக திரு.வைரமுத்து தினேஷ்குமார் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தீர்மானம் நேற்று (08) பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத் அவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த கூட்டத்தில் தமிழரசு கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 16 உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

