கண்டி மற்றும் மாத்தளை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளன.
கண்டிக்கும் கட்டுகஸ்தோட்டாவுக்கும் இடையிலான ரயில் மார்க்கத்தை சீர்செய்வதற்கு வசதியாக ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒகஸ்ட் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒகஸ்ட் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை கண்டி மற்றும் மாத்தளை இடையே ரயில் சேவையில் ஈடுபடாது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.