13ம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் வடகிழக்கு முஸ்லிம் சமூகங்களும்,பெரும்பான்மை சமூகங்களும் அச்சத்தில் உள்ளனர் ஆனால் அது தேவையில்லாத ஒன்று என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்தார்.
இன்று (11) மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
13 ஆம் அரசமைப்பு திருத்தம் என்பது இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக உருவாக்கப்பட்ட இலங்கை அரசியல் யாப்பின் ஓர் அங்கமாகும், இதன் ஊடாக வழங்கப்படும் காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்பன சிறுபான்மை தமிழ் மக்களுக்காக மட்டுமல்ல எதிர்காலத்தில் முஸ்லிம்,சிங்கள மக்களும் தங்கள் உரிமைகளை பாதுக்காக்க இந்த மாகாணசபை முறைமை உதவும். ஆனால் சில அரசியல்வாதிகள் இதை இனவாதத்துடன் உற்றுநோக்குவதுடன் மட்டுமல்லாமல் 13 தொடர்பில் பிழையான புரிதலை மக்களுக்கு பரப்புகின்றனர்.
இதற்கு வடகிழக்கு தலைமைகள் சரியான கலந்துரையாடல்களை செய்து இது தொடர்பில் சரியான தீர்மானகளை எடுக்கவேண்டும் என்று தெரிவித்ததோடு தமிழ்மக்களான நாங்கள் 13 ஆம் திருத்த சட்டத்தினூடக அனைத்து இன மக்களுக்கும் நன்மை செய்யவே விரும்புகிறோம் மாறாக துரோகம் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.