வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று 12ஆம் திகதி மற்றும் 13 ஆம் திகதிகளில் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு விசேட சந்தர்ப்பம் வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 12, 13ஆம் ஆகிய இரண்டு தினங்களிலும் கைதிகளின் உறவினர்களுக்கு ஒரு கைதிக்கு போதுமான உணவு பார்சல், இனிப்பு பார்சல் மற்றும் சுகாதார பொருட்கள் அடங்கிய பார்சல் வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார வழிகாட்டலுக்கு அமைய நாட்டில் இருக்கும் அனைத்து சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிடுவதற்கு விருந்தினர்களுக்கு இந்த விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.