இலங்கையில் உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும் அதிகமாக பணம் உள்ளதாகவும் முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“எமது நாட்டில் உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி. அவர்களிடம் தேவைக்கும் அதிகமாக பணம் உள்ளது.

அந்த நிதியை பாவித்து தேவையான அரசியல் டீல்களை செய்துகொள்வார்கள்” என கூறினார். அதற்கு புது கதை சொல்லி சமாளிப்பார்கள் என அவர் குறிப்பிட்டார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஆட்சியமைப்பு தொடர்பாகவே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.