கொழும்பில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 21 மற்றும் 25 வயதான இரண்டு வாலிபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 06 கிராம் 25 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மட்டக்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.