13ஆவது திருத்தச் சட்டத்தை நடை முறைப்படுத்தக்கூடாது. இது நாட்டைப் பிளவு படுத்தும் நடவடிக்கை. இந்தச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கையை இரண்டாக பிரிக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் எந்தக் காரணத்துக்காகவும் நடைமுறைப்படுத்தப்படக் கூடாதென இதுராகாரே தம்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் தமது எதிர்ப்புக்களை வெளியிட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தசட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டுமென அண்மையில் பாராளு மன்ற உறுப்பினர்அத்துரெலியரத்ன தேரர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது