தூரப்பகுதி பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்கள் விசேட சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பொலிஸ் பிரிவுகளில் விசேட இடமொன்று ஒதுக்கப்பட்டு இந்த பஸ்கள் சோதனையிடப்படவுள்ளன.
இதன்படி , அதிவேகமாக பயணிக்கும் பஸ்கள், தரமற்ற நிலையில் இயங்கும் பஸ்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் வாகன விபத்துகள் அடிக்கடி நிகழும் பகுதிகள் மற்றும் விபத்துகள் ஏற்படும் அபாயமுள்ள இடங்களைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் காவல்துறைமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், காவல்நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகச் சிரேஷ்ட காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனங்களைச் சோதனையிடுவதற்கு ஒவ்வொரு காவல்துறை பிரிவிலும் காவல்துறை உத்தியோகத்தர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் எனவும், பதில் காவல்துறைமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.