மருதநகர் பொதுமக்களும், ரெட் லயன்ஸ் விளையாட்டுக் கழகமும் இணைந்து நாடத்திய விளையாட்டு நிகழ்வும் கலாச்சார நிகழ்வும் வாழைச்சேனை மருத நகர் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (13) நடைபெற்றது.
விளையாட்டு கழகத் தலைவர் தே.தேவகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் சு.ராஜ்கீதன்,சட்டத்தரணி கு.புருசோத்மன்,கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஷிகான் டிலங்க,சிவஸ்ரீ செ.குகராஜ் ஜயா,அருட் கலாநிதி நிஷாந்தன் போதகர்,அருட் சகோதரி அமலநிதர்சினி,அதிபர்.க.கதிர்காமநாதன் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன் போது அதிதிகள் மங்கள வாத்திய இசையுடன் மலர்மாலை அணிவித்து கழக உறுப்பினர்களால் வரவேற்கப்பட்டனர்.மங்கள விளக்கேற்றலுடன் கழகத்தின் நிர்வாக கட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. ஒலிப்பிக் தீபம் ஏற்றல் நிகழ்வுடன் மைதான நிகழ்வுகள் யாவும் நடைபெற்று, நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.













