திருகோணமலை-புல்மோட்டை அரபாத் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கிடையில் இன்று ஏற்பட்ட கை கலப்பில் ஒரு மாணவன் மற்றைய மாணவனுக்கு பிளேட்டால் கழுத்தில் வெட்டியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கைகலப்பானது இரு மாணவர்களும் பாடசாலை முடிந்து வெளியே வரும்போது ஏற்பட்டுள்ளது.

காதல் பிரச்சனை காரணமாகவே இருவருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.